Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோக்கோ கொள்முதல் ஒப்பந்தம்!

Advertiesment
கோக்கோ கொள்முதல் ஒப்பந்தம்!

Webdunia

, செவ்வாய், 3 ஜூலை 2007 (15:01 IST)
தோட்டக்கலை துறையும், காட்பரீஸ் அசோசியேட்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

திருச்சியில் கடந்த 30-ந் தேதி சனிக்கிழமை, நடந்த பல்முனை வேளாண்மை கருத்தரங்கில் தோட்டக்கலை துறையிடம், கோக்கோ அபிவிரத்தி மற்றும் கொள்முதலுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ், வீரபாண ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தை யூக்மோகன் சிங்ராஜ், காட்பரீஸ் அசோசியேட்ஸ் துணைத் தலைவர் மகுடபதி ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.

"கோக்கோ பயிர் உற்பத்தி எப்படியிருந்தாலும் கிலோ ரூ.60க்கு குறைவாக நிர்ணயம் செய்யக்கூடாது என்றும், அதிக விலையில் விற்பனை செய்தால், அதற்கேற்றவாறு விலை அதிகம் கொடுத்து விவசாயிகளிடம் காட்பரீஸ் இந்தியா நிறுவனம் கொள்முதல் செய்து கொள்ளும் என்றும் இதுவே இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம்" என்றார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.

Share this Story:

Follow Webdunia tamil