Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நியூ என்டெவர்: ஃபோர்ட் அறிமுகம்!

நியூ என்டெவர்:  ஃபோர்ட் அறிமுகம்!

Webdunia

, வியாழன், 21 ஜூன் 2007 (17:02 IST)
டிடிசிஐ டெக்னாலஜி, அழகிய புதிய இன்டீரியர்ஸ் மேலும் பாதுகாப்புடன் கூடிய 8 பேர் வசதியாக செல்லக்கூடிய புதிய ஃபோர்ட் என்டர்வர் சென்னையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

1995 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உலக ஆட்டோமேட்டிவ் துறையில் முன்னோடியான ஃ போர்ட் இண்டியா, ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்தின் முழுமையான கிளை நிறுவனமாகும். இந்நிறுவனம் புதிய போர்ட் என்டெவரை சென்னையில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

புதிய என்டெவரை அறிமுகம் செய்து வைத்து பேசிய இந்தியாவின் போர்ட் நிர்வாக இயக்குனர் அரவிந்த் மேத்யு, முரட்டுத்தன்மை மற்றும் நவீன வாகன தொழல்நுட்பம் போன்ற உயரிய தன்மைகளை புதிய என்டெவர் கொண்டிருப்பதாக கூறினார்.

புதிய என்டெவருக்கு அதன் டர்போ - டீசல் காமன் ரெயில் இஞ்செக்க்ஷன் இன்ஜின் (TDCI) 143 PS உச்ச சக்தியையும் , அக்ஸலரேஷன் மற்றும் சிறந்த டெலிவரிக்கு தேவையான வியக்கதக்க 330 NM டார்க்கையும் புதிய என்டெவர் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

முந்தைய மாடலை விட பற்பல மேம்பாடுகளைப் புதிய போர்ட் என்டெவரில் புகுத்தியிருப்பதாக கூறிய மேத்யு, ஆடம்பர அனுபவத்தை தரும் வகையில் இன்ட்டீரியர்கள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

4x2 வீல் ட்ரைவ் வகை ரூ 14,72,000( எக்ஸ் - ஷோரூம் சென்னை ) ட்ரூ ப்ளு 4x4 வீல் ட்ரைவை விரும்புவோருக்கு ரூ 15,62,000 ( எக்ஸ் - ஷோரூம் சென்னை ) என்ற விலைகளில் கிடைக்கும் என்றும் கூடுதல் அம்சங்களை கொண்ட லிமிடெட் எடிஷன் வகையை ரூ 15,52,000 ( எக்ஸ் - ஷோரூம் சென்னை ) விலையில் போர்ட் இண்டிகா வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


Share this Story:

Follow Webdunia tamil