Publish Date: Tue, 12 Jun 2007 (12:41 IST)
Updated Date: Tue, 12 Jun 2007 (12:40 IST)
மும்பை பங்குச் சந்தை இன்று காலை வணிகம் துவங்கிய 5 நிமிடத்தில் 55 புள்ளிகள் உயர்ந்து 14,138 புள்ளிகளாக உள்ளது.
ஆசிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் அந்நிய நிறுவன முதலீடுகளும் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு காரணம் என்று பங்கு தரகர்கள் கூறியுள்ளனர்.
தேசப் பங்கு சந்தையிலும் முன்னேற்றம்!
தேசப் பங்கு சந்தை 21.25 புள்ளிகள் உயர்ந்து 4166.85 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ், லார்சன் & டூப்ரோ, எச்.டி.எ·ப்.சி வங்கி, இன்போசிஸ், இந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ ஆகியவற்றின் பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளன.