Newsworld News Business 0706 08 1070608027_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை பங்குச் சந்தை குறியீடு 117 புள்ளிகள் சரிவு

Advertiesment
மும்பை பங்குச் சந்தை

Webdunia

டாடா ஸ்டீல், ஏசிசி, எச்.டி.எஃப்.சி. மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் வீழ்ச்சியுள்ளதால் மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று ஒரே நாளில் 117 புள்ளிகள் சரிந்தது.

ஒரு கட்டத்தில் 175 புள்ளிகள சரிந்து 14,010 புள்ளிகளாக சரிந்த மும்பை பங்குச் சந்தை பிறகு 58 புள்ளிகள் அதிகரித்து இன்றைய வணிகத்தின் முடிவில் 14,068 புள்ளிகளை எட்டியது.

தேசப் பங்குச் சந்தைக் குறியீடு 29 புள்ளிகள் குறைந்து 4,149 புள்ளிகளாக சரிந்தது.

டாடா ஸ்டீல், ஏசிசி பங்குகள் மிக அதிகபட்சமாக முறையே 4.8, 4.4 விழுக்காடுகள் குறைந்தன. டாடா மோட்டார்ஸ், மாருதி உத்யோக், ஐடிசி, ரான்பாக்ஸி பங்குகளின் விலைகள் சரிந்தது.

ப்ளு ஸ்டார், டைட்டன் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளும் சரிவை சந்தித்தன.

இந்த ஒருவார காலத்தில் இந்தியப் பங்குச் சந்தைகளில் பொதுவாக சரிவு காணப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil