Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு கிளிக்கில் உங்களுக்கு வேண்டிய பொருட்கள்!

ஒரு கிளிக்கில் உங்களுக்கு வேண்டிய பொருட்கள்!
, திங்கள், 14 ஜூலை 2008 (15:43 IST)
உணவு, வாடகைக்கு கார், பூக்கள், மளிகை சாமான்கள் என ஒரே கிளிக்கில் உங்களைத் தேடி வருமாறு சேவை வழங்கி வரும் ஒரு இணையதளம் ஆர்டர்மாங்கர்.காம்.

அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்ற மென்பொருள் பொறியாளர்களால் இந்த இணையதளம் துவங்கப்பட்டது. இந்த இணையதளத்தில் பொருட்களை ஆர்டர் செய்தோமானால் 2 மணி நேரத்தில் அந்தப் பொருள் நம் இடம் தேடி வருகிறது.

பெரிய விருந்துகள், பிரிவு உபசார விழா, திருமண வரவேற்பு மற்றும் வீட்டு விசேஷங்கள் என்று மிகப்பெரிய அளவில் இந்த வர்த்தகச் சேவைகளை இந்த இணையதளம் வழங்கி வருகிறது.

ஹைதராபா‌த்தில் இது முழு நேர சேவை வழங்கி வருகிறது என்றும் சென்னையில் சில சேவைகளை வழங்கி வருவதாகவும், மேலும் பெங்களூர், பூனா ஆகிய இடங்களிலும் சேவை செய்து வருவதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் 4 நகரங்களுக்கு தங்களது சேவைகளை விரிவுபடுத்தவும் ஆர்டர்மாங்கர்.காம் திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு தக்க சேவை வழங்கும் நோக்கத்துடன் 75 ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டி சாலைகளுடன் ஆர்டர்மாங்கர் கூட்டுறவு மேற்கொண்டுள்ளது. மளிகை சாமான்களுக்கு ஃபிரெஷ் அட் செய்ன் விற்பனை நிலையத்துடன் கூட்டுறவு மேற்கொண்டுள்ளது.


மேலும் தனி நபர்கள் உட்பட, மைக்ரோசாஃப்ட், சி.ஏ., பிராக்ரஸ் சாஃப்ட்வேர், டாக்டர் ரெட்டீஸ், இந்து புரோஜெக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு பெரிய அளவில் கேடரிங் சேவை வழங்கி வருகிறது ஆர்டர்மாங்கர்.காம்.

இது தவிரவும், உணவு, பூக்கள், நிறுவனச் சேவைகள் ஆகியவற்றிற்கு தனித்தனியான இணையதளத்தை உருவாக்கவும் ஆர்டர்மாங்கர் திட்டமிட்டுள்ளது.

முதலில் பூக்கள் வர்த்தக சேவைக்கு பெரிய அளவில் இந்த இணையதளம் திட்டமிட்டுள்ளது. ஹைதராபாதில் மிகப்பெரிய அளவில் பூக்கள் விற்பனை நிலையம் ஒன்றை 3 மாதங்களில் திறக்க திட்டமிட்டுள்ளது. செப்டம்பர், 2007-ல் ஃபிளவர்ஸ்2.இன் என்ற மிகப்பெரிய ஆன் லைன் பூக்கள் விற்பனை இணையதளத்தை தங்கள் நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டுள்ளது ஆர்டர்மாங்கர் நிறுவனம்.

Share this Story:

Follow Webdunia tamil