உலகப் புகழ் பெற்ற தேடல் இணையத் தளமான கூகுள், தங்கள் இணையதளம் அளிக்கும் வசதிகளை பொதுமக்களுக்கு விளக்க மேற்கொண்டுள்ள பயணத்தின் முதற்கட்டமாக தற்பொழுது மயிலையில் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மயிலாப்பூர் குளத்திற்கு எதிரில் சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஹோட்டல் ஷெல்டர் அருகே தற்போது கூகுள் பேருந்து மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இன்று மாலை வரை அவ்விடத்தில் இருக்கும் கூகுள் பேருந்து, அதன்பிறகு வேலூரை நோக்கிப் புறப்பட்டுச் செல்கிறது. நாளை வேலூரில் உள்ள ஊரிஸ் பள்ளி, பிறகு ஊரிஸ் கல்லூரி ஆகியவற்றில் மாணவர்களை சந்தித்துவிட்டு வேலூர் கோட்டையில் பொதுமக்களை சந்திக்க உள்ளது.
கூகுள் பேருந்தின் தமிழக பயணம் குறித்த விவரங்களை www.google.co.in/internetbus/ என்ற தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.