ஹிமாச்சலப் பிரதேச மாநில காவல்துறை இணைய தளமான `ஹிம்போல்' ஆன்லைன் சேவையில் சிறப்பாக செயலாற்றி நாட்டிலேயே இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது.
கோவா தலைநகர் பனாஜியில் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் மின் ஆளுமைக்கான (E-Governance) தேசிய விருது வழங்கும் விழாவில் ஹிமாச்சல பிரதேச காவல் துறைக்கு விருது வழங்கப்படுகிறது.
இத்தகவலை ஹிமாச்சல் காவல்துறை ஐ.ஜி தாகூர் தெரிவித்தார்.
மாநில காவல்துறை தலைவர் ஜி.சி. கில் இந்த விருதினைப் பெற்றுக் கொள்வார்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு ஆன்லைனில் ஹிம்போல் வசதி செய்துள்ளது. காவல்துறைக்கு புகார் தெரிவிக்கவும், புகார் தொடர்பாக முன்னேற்றத்தை அறிந்து கொள்ளவும் ஹிம்போல் வழிவகை செய்திருப்பதாக அவர் கூறினார்.
கடன் அட்டைகள் மூலம் டிராபிக் செலான் செலுத்துவதற்கும் ஹிம்போலில் வசதி உள்ளது. இவை உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வசதி உள்ளதால் விருது வழங்கப்படுவதாக தாகூர் கூறினார்.