இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையில் ஆட்குறைப்பு இல்லை என்று முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணைத் தலைவர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில் நுட்பத்துறையின் அடித்தளம் உறுதியாக உள்ளது இதனால் ஆட்குறைப்பு எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் வர்த்தகக் குழுவில் சென்றுள்ள நிலேகனி, டோக்கியோவில் நடைபெற்ற சந்திப்பிற்கிடையே இதனை தெரிவித்தார்.
உலக பொருளாதார நெருக்கடி சிக்கல் வாய்ந்தது என்று கூறிய நிலேகனி இந்திய அரசு அதனை சிறப்பாகவே எதிர்கொண்டு வருகிறது என்றார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையிலான 20 நபர் வர்த்தகக் குழு ஜப்பான் வர்த்தகக் கூட்டமைப்பின் கார்ப்பரேட் தலைவர்களை சந்தித்து உரையாடினர்.
இந்த சந்திப்பிற்கிடையே இன்ஃபோசிஸ் இணைத் தலைவர் நிலேகனி தகவல் தொழில் நுட்பத் துறையில் ஆட்குறைப்பிற்கு இடமில்லை என்று கூறியுள்ளார்.