Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஃபோன் வாடிக்கையாளர்களுக்கு தவணைமுறை- ஏர்டெல்!

Advertiesment
ஐஃபோன் வாடிக்கையாளர்களுக்கு தவணைமுறை- ஏர்டெல்!
புது டெல்லி: ஆப்பிள் ஐஃபோன்களை விற்க உரிமம் பெற்ற இரண்டு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் நிறுவனம் அதிக விலை செல்பேசியான இதனை வாங்க நிதி வசதிகள் செய்து கொடுக்கும் வண்ணம் விசாவுடன் (VISA) கூட்டுறவு மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஐ.சி.ஐ.சி.ஐ. (ICICI), ஹெச்.டி.எஃப்.சி. (HDFC), எஸ்.பி.ஐ. (SBI), சிட்டி பேங்க் (City Bank) ஆகிய வங்கிகளின் விசா கார்டு வைத்திருப்பவர்கள் தவணை முறையில் ஐஃபோன்களை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

3 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரையிலான மாதாந்திர சுலபத் தவணை முறை இதன் முக்கிய அம்சமாகும்.

ஆப்பிள் ஐஃபோனிற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதரவை பெருமளவு தெரிவித்து வருவதால் அதன் விற்பனை உரிமையை பெற்ற மற்றொரு செல்பேசி இணைப்புச் சேவை நிறுவனமான வோடஃபோன் ஏற்கனவே 3 வங்கிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு நிதியுதவி அளிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஐஃபோனின் விலை 8 ஜிபி நினைவகம் கொண்ட செல்பேசி சாதனத்திற்கு ரூ.31,000மும் 16 ஜிபி நினைவகம் கொண்ட சாதனத்திற்கு ரூ.36,1000-ம் ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil