நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் லிமிடெட், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 2 ஆயிரத்து 46 கோடியே 79 லட்சம் ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது 44.86 சதவீதம் உயர்வாகும்.
நிறுவனத்தின் மொத்த வருவாய் 39.72 சதவீதம் உயர்ந்து 7 ஆயிரத்து 952 கோடியே 32 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டு இதேகாலத்தில் 5 ஆயிரத்து 691 கோடியே 45 லட்சம் ரூபாயாக இருந்தது என்று பார்தி ஏர்டெல் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
பார்தி ஏர்டெல் குழுமத்தின் மொத்த இலாபம் 2 ஆயிரத்து 166 கோடியே 68 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டு இதேகால கட்டத்தில் ஒரு லட்சத்து 424 கோடியே 22 லட்சம் ரூபாயாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழுமத்தின் நிகர லாபம் சுமார் 52.13 சதவீதம் உயர்ந்துள்ளது.