பிரிட்டனின் லிபரடா நிதிச் சேவை நிறுவனத்தை தகவல் தொழில் நுட்ப முன்னணி நிறுவனமான ஹெச்.சி.எல். நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
பிரிட்டனின் நிதிச் சேவை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வரும் லிபரடா நிறுவனம் காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறைக்கு நிர்வாக மற்றும் வாடிக்கையாளர்கள் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின் படி, பிரிட்டனில் இந்த நிறுவனத்தின் 4 மையங்களில் உள்ள 800 ஊழியர்களையும் சேர்த்து ஹெச்.சி.எல். வாங்கவுள்ளது. அந்த நிறுவனத்தின் வருவாய் 60 மில்லியன் டாலர்களாக உள்ளது.
மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் ஹெச்.சி.எல். நிறுவனம் வர்த்தக வளர்ச்சி மற்றும் தொழில் நுட்ப நடைமுறைகள் மேம்பாடு ஆகியவற்றிற்காக 24 மில்லியன் டாலர்கள் தொகையை முதலீடு செய்யவுள்ளது.