Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மென்பொருள் ஏற்றுமதியில் டி.சி.எஸ். முதலிடம்!

மென்பொருள் ஏற்றுமதியில் டி.சி.எஸ். முதலிடம்!
, வியாழன், 10 ஜூலை 2008 (12:47 IST)
புதுடெல்லி: தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் சேவை ஏற்றுமதிகளில் டாடா கன்சல்டன்சி நிறுவனம் தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

நாஸ்காம் வெளியிட்டுள்ள 2007- 08ஆம் ஆண்டிற்கான ஐ.டி. ஏற்றுமதி தரவரிசை பட்டியலில் இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் 2, 3-வது இடங்களில் உள்ளது.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் 4-வது இடத்திலும், ஹெச்.சி.எல். 5-வது இடத்திலும் இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து டெக் மஹீந்திரா, பாட்னி கம்ப்யூட்டர், ஐ-ஃப்ளெக்ஸ் சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

எம்ஃபசிஸ் நிறுவனம் 9-வது இடத்திலும், எல் அன்ட் டி நிறுவனம் 10வது இடத்திலும் உள்ளது.

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையான பி.பி.ஓ. பிரிவில் ஜென்பேக்ட் முதலிடம் பெற்றுள்ளது. டபிள்யூ.என்.எஸ்.குளோபல் சர்வீசஸ் இரண்டாவது இடத்திலும், ஐ.பி.எம். நிறுவனத்தின் த‌க்‌ஷ‌் பி.பி.ஓ. நிறுவனம் 3-வது இடத்திலும் உள்ளது.

பி.பி.ஓ. சேவைகள் ஏற்றுமதி பிரிவிலும் டி.சி.எஸ்., இ‌ன்ஃபோ‌சி‌‌ஸ், ‌வி‌ப்ரோ உ‌ள்‌ளி‌ட்ட மு‌ன்ன‌ணி ‌நிறுவன‌ங்க‌ள் முத‌ல் 10 இட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil