இந்திய வெளியீட்டு அயல் அலுவலக சேவைத் துறை ஆண்டுக்கு 35 விழுக்காடு என்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருவதாகவும், அதன் மதிப்பு வரும் 2010 ஆம் ஆண்டில் 5,640 கோடி ரூபாயாக உயரும் என்றும் புதுவை மாநில இந்திய தொழில் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஸ்ரீராம் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, வெளியீட்டு அயல் அலுவலக சேவை பணிகள் துறை கருத்தரங்கில் கலந்து கொண்ட பேசிய அவர், சர்வதேச வெளியீட்டு அயல் அலுவலக பணிச் சேவைக்கான மையமாக சென்னை உருவாகி வருவதாக கூறினார். இந்திய வெளியீட்டு அயல் அலுவலக சேவை பணிகள் துறை வரும் காலங்களில் கணிசமான அளவு வளர்ச்சியடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள வெளியீட்டாளர்கள் தற்போது இந்தியாவை இத்துறையினரின் சேவையைத் தேடத் தொடங்கியுள்ளனர். உலகப் பொருளாதாரத்தின் தேக்கம் நிலை, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்வு இத்துறையினரை பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.