Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெப்துனியாவின் விளையாட்டுத் தளம்!

வெப்துனியாவின் விளையாட்டுத் தளம்!
, திங்கள், 18 பிப்ரவரி 2008 (14:35 IST)
ஒன்பது இந்திய மொழிகளில் இணையதளங்களை வெற்றிகரமாக நடத்தி வரும், இணையதளங்களின் மொழித் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும், ஜி.பி.ஆர்.எஸ் தொழில் நுட்பம் உள்ள செல்பேசிகளிலும் தகவலிறக்கம் செய்யக்கூடிய பயன்பாடுகளை உடையதுமான வெப்துனியா இணையதள குழுமம், கணினி விளையாட்டுக்களுக்கென்று தனி இணையதளம் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

இந்த இணையதளத்தின் சோதனை ஓட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இது வாடிக்கையாளர்களுக்கு முழுதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று வெப்துனியா.காம் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான பங்கஜ் ஜெயின் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நாஸ்காம் தலைமை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் பங்கஜ் ஜெயின், வெப்துனியா அதன் 1.5 மில்லியன் பயனாளர்களுடன் மிகவேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்தார். மேலும் இணையதள வாசிகளுக்கு அவர்கள் சார்ந்த குழுக்களை உருவாக்கிக் கொள்ள வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது, இணையதள வாசிகள் தங்கள் மொழியில் தங்களுடைய இணையதளத்தை உருவாக்கிக் கொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்றார்.

பதிவு செய்துள்ள வாசகர்கள் அளிக்கும் விவரங்கள் பாதுகாக்கப்படுவதோடு, ஒரு குறிப்பிட்ட வாசகர் தனக்கு பிடித்தமான குழுவை அடையாளம் கண்டு, பிறருடனும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த இணையதளப் பக்கங்கள் விளம்பர வருவாய்ப் பகிர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது, எனவே இதில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலம் வரும் வருவாய் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்றார் பங்கஜ் ஜெயின்.

கடந்த ஆண்டின் இறுதியில் வெப்துனியா.காம் இணையதளக் குழுமம் மராத்தி, வங்காளி, கன்னடா, பஞ்சாபி, குஜராத் ஆகிய மொழிகளிலும் தனது பொருளடக்க சேவைகளைத் துவங்கி வெற்றிகரமாக இயக்கி வருகிறது. இந்த பொருளடக்கங்களை யூனிகோட் எழுத்துருவில் வாசிக்கலாம்.

தற்போது துரிதகதி வளர்ச்சி பெற்று வரும் செல்பேசித் துறையை சிறப்பாக பயன்படுத்தும் விதமாக ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம் உள்ள செல்பேசிகளிலும் வெப்துனியா பொருளடக்கங்களை பயனாளர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம். உதாரணமாக செய்திகள், பங்குச் சந்தை நிலவரங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் டவுன் லோடு செய்துகொள்ள முடியும். மேலும் கூடுதலாக எந்த ஒரு தொழில் நுட்பமும் தேவைப்படாமல் மின்னஞ்சல்களை உங்கள் சொந்த மொழிகளிலேயே அனுப்பலாம்.

இந்திய மொழிகளின் பயனுள்ள பொருளடக்கங்கள் கிராமப்புறங்களிலும் பரவ அங்கு இணையதளம் வேகமாக பரவவேண்டும். இதற்கு பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பிராட் பேண்ட் இணையதள இணைப்பை இலவசமாக அளிக்க முன்வரவேண்டும் என்றும் பங்கஜ் ஜெயின் தெரிவித்தார்.

இந்திய மொழிகளில் பொருளடக்கங்கள் பெருகப் பெருக, பயனாளர்கள் குழுவும் பெருகும் என்று பங்கஜ் ஜெயின் மேலும் கூறுகையில் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil