பெங்களுரில் 29, 30 தேதிகளில் நடைபெறும் டெக்சாஸ் கருவி உற்பத்தியாளர்கள் மாநாட்டில், டிஜிட்டல் சிக்னல் பிராஸசர் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப் பட்டுள்ள கார்பன்-டை ஆக்ஸைடை கட்டுப்படுத்தும் நவீன கருவி கண்காட்சியில் இடம்பெறுகிறது.
நாள்தோறும் பல லட்சம் டன்கள் கார்பன்-டை ஆக்ஸைட் பூமியில் இருந்து வளிமண்டலத்திற்குப் பரவுகிறது. இதனால் புவு வெப்பமடைவதுடன் பல்வேறு இயற்கைச் சீற்றங்கள், அழிவுகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க டிஜிட்டல் சிக்னல் பிராஸசர் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப் பட்டுள்ள இந்த கருவி உதவும் என்று டெக்சாஸ் கருவிகள் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இக்கருவி தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியாகும் கார்பன்-டை ஆக்ஸைடு -டின் அளவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. இக்கருவி அடுத்த தலைமுறைக்கு ஏற்ற வகையில் அளவீடுகளை துல்லியமானதாக கணக்கிடும் திறன் கொண்டதாக உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் 10 விழுக்காடு இத்தகைய கருவிகள் பொறுத்தப்படும் நிலையில் இந்தியச் சாலைகளில் ஓடும் கார்களில் குறைந்தபட்சம் 25 லட்சம் கார்களில் இருந்து வெளியாகும் கார்பன்-டை ஆக்ஸைடையாவது வளிமண்டலத்துக்குச் செல்வதைக் நம்மால் குறைக்க முடியும் என்று மித்ரா தெரிவித்தார்.
இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் புவி வெப்பமடைதலை நேரிடையாக குறைக்க மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு உதவுகின்றன என்றுடெக்சாஸ் இண்ஸ்ட்ரூமெண்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மித்ரா கூறியுள்ளார்.