கோவை கொடிசியா மற்றும் இன்னோவே டிவ் கான்சப்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து (ஐஸ் 2007) என்ற மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை துவக்கியுள்ளது.
இங்கு ஆட்டோமொபைல், மொபைல் மற்றும் ஐ.டி, எலக்ட்ரானிக்ஸ், வங்கிகள், ரியல் எஸ்டேட், சுற்றுலா மையம், கார்மெண்ட்ஸ், ஹெல்த், பர்னிச்சர், கல்வி வேலைவாய்ப்பு மையம், திருமண தகவல் மையம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் பொருட்களை விற்பனை செய்கிறது.
கண்காட்சியில் முற்றிலும் குளிர்சாதன வசதியூட்டப்பட்ட 250க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளன. மேலும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக பேஷன் ஷோ, டான்ஸ், மேஜிக் ஷோ போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியை கோவை கொடிசியா வளாகத்தில் கோவை காவல் ஆணையர் சி.கே.காந்திராஜன் துவக்கி வைத்தார். கண்காட்சி வரும் 23ஆம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியை 5 லட்சம் பேர் பார்வையிடுகிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.