இணைய இணைப்பைப் பெற்று பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு முதல் காலாண்டில் 8.03 விழுக்காடு அதிகரித்துள்ளதென இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது!
இது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 85.8 லட்சமாக இருந்த இணைய இணைப்பாளர்களின் எண்ணிக்கை 2வது காலாண்டில் 92.70 லட்சமாக அதிகரித்துள்ளது.
இணையத்தை தங்களுடைய செல்பேசிகளின் வாயிலாக தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கை மார்ச் 2007 வரை 3 கோடியே 13 லட்சமாக உயர்ந்துள்ளது.
இணைய தொடர்புகளை அதிகம் அளித்துள்ள முன்னணி நிறுவனமாக பி.எஸ்.என்.எல். உள்ளது. அதன் பங்கு 45.21 விழுக்காடு. இதனைத் தொடர்ந்து எம்.டி.என்.எல். 19.01 விழுக்காட்டுடன் 2வது இடத்தில் உள்ளது. இணைய தொடர்பு பெற்றுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 40 ஆயிரம் பேர். விரிவலை இணைப்பை (256 கே.பி.பி.எஸ்./அதற்கு மேலும் இறக்க வேகம்) 23.4 லட்சம் பேர்.