புதிய ஷெவர்லே பீட்..! இப்போது இன்னும் சிறியதாய்..!
, வியாழன், 20 மார்ச் 2014 (18:28 IST)
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் புதிய ஷெவர்லே பீட் ஹேட்ச் பேக்கை (பேஸ் லிப்ட்) சமீபத்தில் வெளியிட்டது. நான்கு ட்ரிம்களான பிஎஸ், எல்எஸ், எல்டி., மற்றும் எல்டி(ஓ) என்றும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி., தேர்வுகளிலும் புதிய பீட் கிடைக்கிறது.
புதிய பீட்டின் வெளிப்புறத் தோற்றத்தில் கவனிக்கும் படியான மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புறம் அகலமாக தெரிவதும், பின்புறமாக சரிந்த கூரையும், அதன் மீது இருக்கும் ரெப்லிங்குகளும், கவர்ச்சியான, சுவாரசியமான அம்சங்களாக தெரிகின்றன.இரண்டு கதவுகள் போன்ற தோற்றத்தைக் கொடுப்பதற்காக, பின்புற கதவின் பிடிகளை, "சி' பில்லரில் மறைவாக அமைத்திருக்கின்றனர். இதனால் பின்புற ஜன்னல்களின் அளவு சற்றே குறைந்திருக்கிறது என்றாலும், பக்கவாட்டுத் தோற்றம் மிக நேர்த்தியாகவே உள்ளது. உட்புறம் டேஷ்ஷில் உள்ள சென்டர் கன்சோல், இரட்டையாக கொடுக்கப்பட்டுள்ளதும், பியானோ கறுப்பிலான நிறமும் கவர்ச்சியாக உள்ளது.
சீட்களின் தரமும், வடிவமைப்பும் புதிய பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய பீட்டில் பின்புற இருக்கைகளின் நடு இருக்கைக்கு ஹெட் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.