Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி ரயிலில் பயணம் செய்யவில்லையென்றால் பணம் கிடைக்காது

இனி ரயிலில் பயணம் செய்யவில்லையென்றால் பணம் கிடைக்காது
, புதன், 26 பிப்ரவரி 2014 (18:22 IST)
ரயிலில் பயணம் செய்யவில்லையென்றால் பணம் மீண்டும் கிடைக்காது என்று விதிமுறையைக் கொண்டு வர ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
FILE

தொலைதூரமாக ரயில்களில் பயணம் செய்பவர்கள் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் வசதி அமலில் உள்ளது. அதன்படி, பயணத் தேதிக்கு 2 நாட்கள் முன்னதாக வரை ரத்து செய்பவர்களுக்கு 60 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு மீதி பணம் திரும்ப தரப்படும். அது படிப்படியாகக் குறைந்து பயணத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 50 சதவீதக் கட்டணம் திரும்ப தரப்படும். கடைசி நேரம், அதற்குப் பிறகு குறைந்த அளவிலான கட்டணம் மட்டுமே தரப்படும். கடைசி நேரத்தில் தாமதம் உட்பட பல்வேறு காரணங்களுக்காகப் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள், குறைந்த பணமாவது கிடைத்ததே என்று திருப்தி கிடைத்து வந்தது.

ஆனால் தற்போது கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்யும் பயணிகளுக்கு கட்டணம் வழங்கப்பட முடியாது என்ற புதிய விதியைக் கொண்டு வர மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. இந்த விதி மார்ச் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

இதனால் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்வதைப் பயணிகள் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால், பயணத்தோடு பணத்தையும் இழக்க வேண்டியதுதான்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil