ஓய்வூதிய நடவடிக்கைகள் எளிமையாகின்றன
, செவ்வாய், 25 பிப்ரவரி 2014 (16:45 IST)
ஓய்வூதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எளிமையாக்கியுள்ளது. இதனால் ஓய்வூதியம் வழங்குதல், திருத்தப்பட்ட படிவங்களை மூலம் அவற்றை செலுத்துதல், மற்றவர்களுக்கு படிவங்களை விநியோகித்தல் ஆகியவை எளிதாகும்.
“இதன் மூலம் பிரமாண அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விடுத்து, சுய சான்றளிப்பின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஏற்றுக்கொள்ளலாம்” என்று அமைச்சரவை வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.ஓய்வூதிய விதிமுறைகளின் கீழ் படிவங்களில் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், திருத்தப்பட்ட படிவங்கள் துறையின் இணையத்தளமான www.Persmin.Nic.In இல் காணக் கிடைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நிலுவையில் உள்ள ஓய்வூதியங்கள், குறைக்கப்பட்ட ஓய்வூதியங்கள், அரசு சேமநல நிதி ஆகியவற்றை செலுத்துவதற்கு ஏராளமான படிவங்களைப் பயன்படுத்துவது கைவிடப்பட்டுள்ளது. ஓய்வூதியங்கள் வழங்குவதற்குரிய காலம் 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளன. இணையத்தளம் மூலம் ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் செலுத்தும் வகையில் ‘பாவிஷ்யா’ என்ற முறை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.