Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல் பங்க்களில் 5 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை

பெட்ரோல் பங்க்களில் 5 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை
, வியாழன், 3 அக்டோபர் 2013 (10:30 IST)
FILE
சென்னை உள்பட 5 மாநகரங்களில் உள்ள பெட்ரோல் பங்க்களில் 5 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை தொடங்கப்படுகிறது.

சென்னை, மும்பை, பெங்களூர், கொல்கத்தா, டெல்லி ஆகிய 5 மாநகரங்களில் ஐ.டி. என்றழைக்கப்படும் தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பி.பி.ஓ. ஊழியர்கள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வந்து குடியேறுகிறார்கள். இவர்களது வசதிக்காக 5 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் சிலிண்டர்களை பெட்ரோல் பங்க்களில் விற்பனை செய்ய மத்திய அரசின் பெட்ரோலியத்துறை முடிவு செய்துள்ளது. இந்த சிலிண்டர்கள் சந்தை விலையில் விற்பனை செய்யப்படும். மானியம் கிடையாது.

குறிப்பாக, இந்திய எண்ணெய் கழகம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை கம்பெனிகள் நேரடியாக நடத்தி வருகிற பெட்ரோல் பங்க்களில் மட்டுமே 5 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும். இந்த 3 பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாடு முழுவதும் 1,440 பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே உள்ளன.

பெங்களூரில் வரும் 5 ஆம் தேதி நடக்கிற நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கலந்துகொண்டு, 5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைக்கிறார். இதேபோன்று, வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படியும், வசதிப்படியும் சமையல் கேஸ் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் வசதியும் வந்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள எந்தவொரு கேஸ் சேவை நிறுவனத்துக்கும், ஏஜென்சிக்கும் மாறிக்கொள்ள முடியும்.

தற்போது ஒருவர் எந்தவொரு சமையல் கேஸ் ஏஜென்சியில் கேஸ் சிலிண்டர் வினியோகம் பெற்று வருகிறாரோ, அந்த ஏஜென்சியில் சேவைக்குறைபாடு இருந்தாலும்கூட, பிறிதொரு ஏஜென்சிக்கு மாற முடியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் ‘போர்டபிலிட்டி’ என்றழைக்கப்படுகிற கேஸ் சேவை ஏஜென்சியை தங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ள முடியும், கேஸ் கம்பெனியையும் மாற்ற முடியும். என்ற வசதி பொதுமக்களுக்கு நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வசதி தமிழ்நாட்டில் சென்னை, கோவை நகரங்களிலும், மராட்டியத்தில் மும்பை, புனே, நாக்பூரிலும், கர்நாடகத்தில் பெங்களூர், ஹூப்ளியிலும், கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சியிலும் முதற்கட்டமாக அமல்படுத்தப்படுகிறது. பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் வந்து விடும்.

Share this Story:

Follow Webdunia tamil