கார் விற்பனையில் ஃபோர்டு ஃபிகோ புதிய சாதனை
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2013 (18:20 IST)
ஃபோர்டு ஃபிகோ 3 ஆண்டுகளில் 3 லட்சம் கார் விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஃபோர்டு ஃபிகோ உள்நாட்டு சந்தை மட்டமின்றி, 37 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஃபோர்டு நிறுவனத்துக்கு புதிய முகவரியை பெற்றுத் தந்த இந்த கார் தற்போது விற்பனையில் 3 லட்சத்தை கடந்திருப்பது குறித்து ஃபோர்டு பெருமிதம் தெரிவித்துள்ளது.