இந்தியாவில் நிசான் கேஷ்கி எஸ்யூவி விரைவில் விற்பனை
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2013 (18:04 IST)
ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிசான் கேஷ்கி எஸ்யூவி காரை நிசான் நிறுவனம் அடுத்த 12 மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.
நிசான் நிறுவனத்தின் ஐரோப்பிய டிசைன் சென்டரால் வடிவமைக்கப்பட்ட முதல் ஐரோப்பிய மாடல் இது. 2006 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் உள்ள சுந்தர்லேண்ட் ஆலையில் இந்த எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது. 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது.நிசான் நிறுவனத்தின் பி32 எல் என்ற புதிய பிளாட்பார்மில் இந்த எஸ்யூவி வடிவமைக்கப்பட்டது. நிசானின் புதிய கிராஸ்ஓவர் மாடல்கள் இந்த எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.