Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெங்காயம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு

வெங்காயம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2013 (15:29 IST)
FILE
மழை காரணமாக உற்பத்தி குறைந்ததால் வெங்காயம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மொத்த மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.75 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. சமீபத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பெய்த கனமழையால் வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மகாராஷ்டிரா மாநில வெங்காயத்தையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. மேலும், பதுக்கலிலும் ஈடுபடுவதால் வெங்காயம் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் பாவூர்சத்திரம், ஆலங்குளம், கீழப்பாவூர், அகரம், கிடாரக்குளம் மற்றும் பெங்களூர், புனே ஆகிய இடங்களில் இருந்து பல்லாரி வெங்காயம் ஆலங்குளம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகிறது. பாவூர்சத்திரம் பகுதியில் வழக்கமாக 100 சதவீதம் விவசாயிகளும் பல்லாரி உற்பத்தி செய்வது வழக்கம். மழை பொய்த்து போனதால் 10 சதவீதம் பேர் மட்டுமே வெங்காயம் பயிரிட்டுள்ளனர். இதனால், கடந்த வாரம் பல்லாரி கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டது.

மொத்த கடைகளில் தற்போது விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.60 முதல் 75 வரை விற்கப்படுகிறது. அடுத்த மாதம் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். அப்போது தேவை அதிகமாக இருக்கும் என்பதால் வெங்காயம் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பெரிய வெங்காயம் விலை உயர்ந்துள்ள அதே நேரத்தில், ஆறுதல் தரும் விதமாக கடந்த மாதம் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ.45 ஆக விலை குறைந்துள்ளது.

இதனால், பெரும்பாலான மக்கள் சின்ன வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ ரூ.30,35க்கு விற்பனையான வெங்காயம், ஞாயிறன்று கிலோ ரூ.50க்கு விற்றது. சில்லறை விற்பனையில் அதிகபட்சமாக கிலோ ரூ.60க்கு விற்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil