இறக்குமதி வரி உயர்வால் தங்கம், வெள்ளி விலை மேலும் அதிகரிக்கும்
, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2013 (15:03 IST)
தங்கம் இறக்குமதி வரியை 8 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.வெள்ளி இறக்குமதி வரியையும் 6 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி பிளாட்டினம் இறக்குமதி வரியையும் 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி வரி உயர்வால் தங்கம், வெள்ளி விலை மேலும் உயரும் எனத் தெரிகிறது.