தங்கம் விலையில் அதிரடி உயர்வு
Publish Date: Mon, 22 Jul 2013 (18:55 IST)
Updated Date: Mon, 22 Jul 2013 (18:55 IST)
சென்னையில் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை திடீரென உயர்ந்துள்ளது.தங்கம் விலை இன்று 22 காரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,553க்கும், சவரனுக்கு ரூ.272 அதிகரித்து ரூ.20,424க்கும், 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.355 அதிகரித்து ரூ.27,300க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலையிலும் ஏற்றம் காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து ரூ.43.70க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.40,835க்கும் விற்பனையாகிறது.