நெற்பயிரை தாக்கும் சிலந்தி பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய முறை பற்றி திருவூர் நெல் ஆராய்ச்சி நிலைய தலைவர் ராம சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது.
விவசாயிகள் நெற்பயிரை பயிர் செய்யும் போது ஜுன், ஜுலை மாதங்களில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகம் நிலவுவதால் சிலந்தி பூச்சியின் தாக்குதல் அதிகமாக தென்படும்.
பூச்சி தாக்கிய பயிர்களின் அடி இலைகளில் மஞ்சள் கலந்த வெள்ளை நிற புள்ளிகள் தோன்றும். இதனால் ஒளிசேர்க்கை தடைபட்டு மகசூல் பாதிக்கப்படும். வறட்சியான காலங்களில் சிலந்தி அதிகம் காணப்படுவதால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டியது அவசியம்.
பின்பு புரஃபனோபாஸ் பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு எக்டேருக்கு 1000 மி.லி என்ற அளவில் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து பூச்சியை கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.