Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீனவர்களுக்கு உதவும் "டாட்' கருவி

Advertiesment
மீனவர்களுக்கு உதவும்
புதுக்கோட்டை , செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (12:27 IST)
மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஆபத்து ஏற்பட்டால், கரையில் உள்ள தை கடலோரக் காவல் படைக்கு தெரிவிக்கும் வகையில் "டாட்' என்ற புதிய கருவி விசைப் படகு மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கருவியை "இஸ்ரோ' விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதில் 5 பொத்தான்கள் உள்ளன. மீனவர்கள் ஆபத்து ஏற்பட்டால், இதில் உள்ள 1 வது பொத்தானை அழுத்தினால் கருவி இயங்க தொடங்கும். பிறகு தீ விபத்தைத் தெரிவிக்க 2 வது பொத்தான், மருத்துவ உதவித் தேவைப்பட்டால் 3 வது பொத்தான், படகு மூழ்குவதைத் தெரிவிக்க 4 வது பொத்தான், கடலுக்குள் தவறி விழும்பட்சத்தில் 5 வது பொத்தான் என சூழ்நிலைக்கேற்றவாறு பொத்தானை அழுத்தினால், கடலோரக் காவல் படையினர் உண்மைநிலையை அறிந்து அதற்கேற்ப பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகளை எடுப்பர்.

இந்த கருவியின் எடை சுமார் 4 கிலோ. இது 6 வோல்ட் ஆயுள்கால பேட்டரியில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியின் விலை ரூ. 20 ஆயிரம்.

இந்த கருவி நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், 65 விசைப் படகு மீனவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இதுகுறித்து ஜகதாப்பட்டினம் விசைப் படகு மீனவர்கள் சங்கத் தலைவர் ஜி. ராமகிருஷணன் கூறுகையில், கடலுக்குள் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து இந்தக் கருவியின் மூலம் உடனே தகவல் தெரிவித்து உதவியைப் பெறமுடியும் என கடலோர காவல் படையினரும், மீன்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கருவியை உபயோகித்த பிறகுதான் முழுப்பயனும் தெரிய வரும் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil