Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்யம் கம்ப்யூட்டர் சேர்மனாக கிரன் கார்னிக் நியமனம்

சத்யம் கம்ப்யூட்டர் சேர்மனாக கிரன் கார்னிக் நியமனம்
புது டெல்லி , சனி, 7 பிப்ரவரி 2009 (12:56 IST)
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் சேர்மனாக கிரன் கார்னிக் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் சேர்மன் கணக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக அறிவித்தார். இதை தொடர்ந்து அவரும், அவரது தம்பியும் மேலாண்மை இயக்குநருமான ராம ராஜு, தலைமை நிதி அதிகாரி சீனிவாஸ் ஆகியோரை, ஆந்திர மாநில சி.பி-சி.ஐ.டி காவல் துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் தற்போது நீதி மன்ற காவலில் உள்ளனர். இவர்களிடம் உச்ச நீதி மன்ற அனுமதியின் பேரில், பங்குச் சந்தையை கண்காணிக்கும் செபி அதிகாரிகளும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

அத்துடன் மத்திய நிறுவன அமைச்சகத்தின் தீவிர நிதி மோசடி பிரிவும் விசாரணை மேற்கொண்டுள்ளது.

சத்யம் நிறுவனத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிட மத்திய அரசு கிரன் கார்னிக் உட்பட ஆறு இயக்குநர்களை நியமித்தது. இவர்கள் அடிக்கடி கூடி விவாதித்து, இந்நிறுவனத்தின் பணிகளை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்ற வியாழக்கிழமை இயக்குநர்கள் குழு, சத்யம் நிறுவனத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஏ.எஸ். மூர்த்தியை, தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தது.

இந்நிலையில் நேற்று நசோசெம் அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போது சத்யம் நிறுவனத்தில் மத்திய அரசு நியமித்துள்ள ஆறு இயக்குநர்களில் ஒருவருமான கிரன் கார்னிக்கை சேர்மனாக மத்திய அரசு நியமித்துள்ளது.

புது டெல்லியில் நேற்று மத்திய நிறுவன விவகாரத்துறை அமைச்சர் பிரேம் சந்த் குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முறைகேடுகள் பற்றிய தீவிர நிதி மோசடி பிரிவின் [Serious Fraud Investigation Office (SFIO)] விசாரணை சரியான திசையில் சென்று கொண்டுள்ளது.

சத்யம் கம்ப்யூட்டர் மற்றும் இதன் நிறுவனர்களுடன் தொடர்புள்ள 325 நிறுவனங்கள, 25 தனிநபர்களுடனும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கணக்கு தணிக்கை நிறுவனமான பிரைஸ் வாட்சர்ஹவுஸ் [Price Waterhouse (PW)] நிறுவனத்தின் பெங்களூர் நிறுவனத்திலும் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

இந்த தணிக்கை நிறுனத்தை சேர்ந்த இரண்டு தணிக்கையாளர்களை (ஆடிட்டர்), ஏற்கனவே ஆந்திர மாநில காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil