இந்தியா எவ்வித காரணமும் கூற முடியாதபடி பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்த நெருக்கடி இது வரை உள்ள பொருளாதார கொள்கைகளையும், கருத்துக்களுக்கும் சவால் விடும் வகையில் உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் கூறினார்.
மும்பையில் இன்று சுப்பாராவ், இந்திராகாந்தி மேம்பாட்டு ஆய்வு மையத்தின் பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.
இதன் தலைவராவும் உள்ள சுப்பாராவ் பேசுகையில், இந்த ஆய்வு மையத்தில் இருந்து பட்டம் பெற்று செல்பவர்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சுப்பாராவ் பேசுகையில், ரிசர்வ் வங்கி உரிய நேரத்தில் வட்டியை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். மத்திய, மாநில அரசுகள் வாங்கும் கடனை திரட்டுவதில் மிக திறமையாக செயல்படுகின்றோம் என்று கூறினார்.
தனியார் கடன் பத்திரங்கள் குறித்து கூறுகையில், இது பற்றி ரிசர்வ் வங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்கும். சர்வதேச நிதியம் 2009 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கு மிகுந்த நெருக்கடியான நேரமாக இருக்கும் என்று கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி பணப்புழக்கம் பற்றாக்குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளும் என்று சுப்பாராவ் தெரிவித்தார்.