Publish Date: Thu, 05 Feb 2009 (18:12 IST)
Updated Date: Thu, 05 Feb 2009 (18:11 IST)
பொறியியல் கட்டுமானத் தொழிலில் முன்னணி நிறுவனமான லார்சன் அன்ட் டியூப்ரோ நிறுவனத்தின் லாபம், இந்த நிதி ஆண்டில் டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 25 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதன் லாபம் ரூ. 1,520 கோடி. நிகர வருமானம் ரூ. 8,700 கோடி. இந்த நிதி ஆண்டின் 9 மாதங்களில் நிறுவத்தின் லாபம் ரூ. 2,483 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வருவாய் ரூ. 39,104 கோடி.