ஸ்டெபிலைசர் உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்களை தயாரிக்கும் வி-கார்ட் நிறுவனத்தின் வருமானம் 17 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதன் லாபம் ரூ. 69.21 கோடியாக உயர்ந்தது.
சென்ற நிதி ஆண்டில் இதேகாலகட்டத்தில் இதன் லாபம் ரூ. 65.13 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் ரூ. 3.17 கோடியாகும். கோவையில் இதன் கேபிள் உற்பத்தி ஆலை தற்போது உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. உத்ராகண்டில் அமைக்கப்பட்டு வரும் ஆலை அடுத்த மாதம் உற்பத்தியைத் தொடங்கும் என இந் நிறுவனம் தெரிவித்துள்ளது.