Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேப் ஆசியா கண்காட்சி தொடக்கம்

Advertiesment
பேப் ஆசியா கண்காட்சி தொடக்கம்
சென்னை , வியாழன், 5 பிப்ரவரி 2009 (13:35 IST)
சென்னையில் இன்று காலை காதிதம், காதித கூழ், காதிதத்தில் பயன்பாடு குறித்த மூன்று நாள் கருத்தரங்கும், கண்காட்சி துவங்கியது.

காகிதம், அதன் பல்வேறு பயன்கள், மூலப் பொருள், காகிதத்தில் இருந்து பல்வேறு வகை பொருட்களை தயாரித்தல், அதற்கு பயன்படும் இயந்திரங்கள், அச்சு போன்றவைகள் குறித்து கருத்தரங்கும், இயந்திரங்களின் கண்காட்சியும் நடைபெறுகிறது.

“பேப்ஆசியா-2009” (PapAsia 2009) என்ற தலைப்பில் நடைபெறும் சர்வதேச கருத்தரங்கு-கண்காட்சியை நெக்ஜின் எக்ஸிபிஷன் (Nexgen Exhibitions) என்ற நிறுவனம் நடத்துகிறது.

இந்த கண்காட்சியை மத்திய வர்த்தக-தொழில் அமைச்சகத்தைச் சேர்ந்த இயக்குநர் எஸ்.பி.மயூரா தொடங்கிவைத்தார். சேஷாயி பேப்பர் ஆலையின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.காசி விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.

மூன்று நாட்கள் நடைபெறும் கருத்தரங்கு, கண்காட்சியில் நவீன இயந்திரங்கள் இடம் பெறுகிறது. காதிதத்தில் இருந்து பல்வேறு பொருட்களை தாயரிக்கும் இயந்திறங்கள் இடம் பெறும். இதன் பயன்பாடு, மூலப் பொருட்கள், உற்பத்தி செய்யும் பொருட்கள் பற்றி விளக்கப்படும்.

கருத்தரங்கில் கிராப்ட் பேப்பர் தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஆர் ரபீந்தர் சிறப்புரையாற்றுகிறார்.

உலக அளவில் காதிதத்தை பயன்படுத்துவதில், இந்தியா 15 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் வருடத்திற்கு 60 லட்சம் காகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் பேப்பர் ஆலைகள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதுள்ளது. இது குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.

இந்தியாவில் தற்போது வருடத்திற்கு 72 லட்சம் டன் காதிதம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இது அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும். இந்தியாவின் காகிதம் தேவை, 2010 ஆம் ஆண்டில் 80 லட்சம் டன்னாக இருக்கும். இது 2020 ஆம் ஆண்டில் 130 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தனிநபர் காகிதம் பயன்பாடு 7 கிலோவாக உள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் தனிநபர் பயன்பாடு 53 கிலோவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil