Publish Date: Thu, 05 Feb 2009 (12:28 IST)
Updated Date: Thu, 05 Feb 2009 (12:27 IST)
பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தீர வளர்ந்த நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று ஐ.நா சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு பிரிவு பொதுச் செயலாளர் சுபாசாய் பனிச்பக்டி (Supachai Panitchpakdi) கூறினார்.
சர்வதேச உறவுக்கான நிபுணர்கள் கூட்டத்தில், தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருங்கினைப்பு கூட்டத்தை துவக்கிவைத்து சுபாசாய் பனிச்பக்டி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பாதிப்புக்களை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகளுக்கு இடையே வர்த்தகம். முதலீடு உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அவசியம். இந்த நெருக்கடியில் இருந்து வளரும் நாடுகள் மீள, இதுவே தெற்கு-தெற்கு நாடுகள் உதவி செய்ய வேண்டிய சரியான தருணம்.
வளர்ந்த நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் 1995 ஆம் ஆண்டில் இருந்து 2007 ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு சராசரியாக 13 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த வர்த்தக் 2007 ஆம் ஆண்டு 2.4 டிரிலியன் டாலராக அதிகரித்துள்ளது. இது உலக அளவில் நடைபெறும் மொத்த ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் 20 விழுக்காடு என்று தெரிவித்தார்.
இந்த ஏற்றுமதி வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு நவீன ஆற்றலுடன் உற்பத்தி செய்யப்படும் பொருட்களாகும். இவைகளில் பலமடங்கு இலாபம் கிடைக்கிறது என்று ஐ.நா சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு பிரிவு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.