Newsworld Finance News 0902 04 1090204051_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாய் மதிப்பு உயர்வு

Advertiesment
ரிசர்வ் வங்கி டாலர் யூரோ யென் பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ7027
மும்பை , புதன், 4 பிப்ரவரி 2009 (13:28 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 பைசா அதிகரித்து.

இன்று அந்நியச் செலவாணி சந்தையில் வங்கிகள் உட்பட பல்வேறு தரப்பினர் டாலரை விற்பனை செய்தனர். இதனால் டாலரின் மதிப்பு குறைந்து, இந்தயி ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.60 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 23 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.83.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.59 முதல் ரூ.48.69 என்ற அளவில் இருந்தது.

நேற்று டாலரின் மதிப்பு 9 பைசா குறைந்தது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.65 பைசா
1 யூரோ மதிப்பு ரூ.63.46
100 யென் மதிப்பு ரூ.54.32
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.70.27.

Share this Story:

Follow Webdunia tamil