Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹானோவர் கண்காட்சியில் 150 இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு

Advertiesment
ஹானோவர் கண்காட்சியில் 150 இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு
மும்பை , செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (15:36 IST)
உலக அளவில் புகழ் பெற்ற ஹானோவர் தொழில்நுட்ப கண்காட்சியில், இந்தியாவைச் சேர்ந்த 150 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

ஜெர்மன் நாட்டின் ஹானோவர் நகரில் நடக்கும் சர்வதேச தொழில்நுட்ப கண்காட்டி புகழ்பெற்றது. இந்த கண்காட்சியில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள், அவற்றின் தொழில் நுட்ப ஆய்வு, புதிய கண்டுபிடிப்புகளை கண்காட்சிக்கு வைக்கின்றன. அத்துடன் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளும் இடம் பெறும்.

தொழில்நுட்பம், பொறியியல் துறையில் முன்னணி நிறுவனங்களுக்கு வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக ஹானோவர் தொழில்நுட்ப கண்காட்சி அமைகின்றது.

இந்த கண்காட்சி வருகின்ற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 24 வரை நடைபெற உள்ளது. இதில் 62 நாடுகளைச் சேர்ந்த 6,500 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இதை ஜெர்மன் அதிபர் ஏஜ்சலா மெர்கில் [Angela Merkel] தொடங்கி வைக்கிறார்.

இந்த கண்காட்சி பற்றி டியுட்சி மெஸ்ஸி [Deutsche Messe] மூத்த துணைத் தலைவர் வோல்பாங் பீச் [Wolfgang Pech] கூறுகையில், தற்போது உலக அளவில் பொருளாதார நெருக்கடி நிலவினாலும், இந்த கண்காட்சி அரங்குகள் முழுவதையும், பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே பதிவு செய்து முடித்துவிட்டன. 2007 ஆம் ஆண்டு கண்காட்சியில் 2,40,000 பேர் வருகை தந்தனர். இந்த வருடம் இதை விட அதிக அளவு பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

2006 ஆம் வருட கண்காட்சியில் இடம் பெற்ற இந்திய நிறுவனங்கள், கண்காட்சியின் போது 1.6 பில்லியன் அளவிற்கு கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. சென்ற வருடம் இந்திய நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த பரப்பளவை விட, கூடுதல் இடத்தில் அரங்குகளை அமைத்தன என்று தெரிவித்தார்.

இந்த வருடம் இந்திய நிறுவனங்கள் மாற்று மின் விசை, தொழிற்சாலை தானியங்கி, கம்ப்ரஷர் ஏர் அண்ட் வேகம் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில், கருவி, இயந்திரங்களை உற்பத்தி செய்து தருவதற்கான ஒப்பந்தம் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.

இதில் பங்கேற்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறும் போது, இந்திய நிறுவனங்களுக்கு அவைகளின் திறமை, உற்பத்தி செய்த பொருட்கள் பற்றி விளக்குவதற்கு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. இதற்கு ஆகும் செலவை பற்றி கவலைப்பட கூடாது. இதில் பங்கேற்பதால் ஒரு விற்பனை வாய்ப்பு கிடைத்தாலே, எல்லா செலவும் திரும்ப கிடைத்துவிடும் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil