Publish Date: Tue, 03 Feb 2009 (13:42 IST)
Updated Date: Tue, 03 Feb 2009 (13:42 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா அதிகரித்து.
இன்று காலையில் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது. இதனால் அந்நிய முதலீடு பங்குச் சந்தையில் வரும் என்பதால், வங்கிகள் டாலரை விற்பனை செய்தன.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.80 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 12 பைசா குறைவு.
நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.92-48.93.
நேற்று ரூபாயின் மதிப்பு 5 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.74 முதல் ரூ.48.84 என்ற அளவில் இருந்தது.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.80 பைசா
1 யூரோ மதிப்பு ரூ.62.67
100 யென் மதிப்பு ரூ.54.54
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.69.22.
Webdunia
Publish Date: Tue, 03 Feb 2009 (13:42 IST)
Updated Date: Tue, 03 Feb 2009 (13:42 IST)