Newsworld Finance News 0902 02 1090202046_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாய் மதிப்பு 20 பைசா சரிவு

Advertiesment
டாலர்
, திங்கள், 2 பிப்ரவரி 2009 (14:00 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா சரிந்தது.


இன்று காலையில் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் சரிந்தன. ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. இதனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்யும் என்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. அத்துடன் மற்ற அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்ததால், இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.076 ஆக அதிகரித்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 20 பைசா உயர்வு.

வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.48.87-48.88.

இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.49.00 முதல் ரூ.49.12 என்ற அளவில் இருந்தது.


Share this Story:

Follow Webdunia tamil