கோவை தொழில் கூட்டமைப்பு சங்கம் (கோஇந்தியா) சார்பில் கள்ளப்பாளையத்தில் கட்டப்பட்ட ஒருங்கினைந்த வார்பட தொழிற்சாலைகள் மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த தொழிற்பேட்டையால் 2 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்று கோஇந்தியா தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
கோவை தொழில் கூட்டமைப்பு சங்கமும், கோவை பவுண்டரி மற்றும் தொழிலதிபர்கள் சங்கமும் இணைந்து கள்ளப்பாளையத்தில் தொழிற்பேட்டையை உருவாக்கி வருகின்றன. இதில் 27 ஏக்கரில் கட்டப்பட்ட ஒருங்கினைந்த வார்பட தொழிற்சாலைகள் மையம் (கிளஸ்டர்) கோஇந்தியா தலைவர் ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த தொழிற்பேட்டையில் ரூ.60 கோடி செலவில் வார்ப்பட தொழிற்சாலைகள் அமைக்கத் திட்டமிள்ளோம். ஒருங்கினைந்த வார்பட தொழிற்சாலைகள் மையத்தில், 30-க்கும் மேற்பட்ட வாப்ப்பட தொழிற்சாலைகள். இதன் மூலம் புதிதாக சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.
வார்ப்பட தொழிலுக்கு மின்சாரம் மிகவும் இன்றியமையாதது. தற்போது நிலவும் மின்வெட்டால் வார்ப்பட உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. எனவே, தடையின்றி மின்சாரத்தை வழங்கி, வார்ப்பட தொழிலை காக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த விழாவில் கோஇந்தியா துணைத் தலைவர் சி.ஆர்.சுவாமிநாதன், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜெயக்குமார் ராமதாஸ், கொடிசியா தலைவர் இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனர்.