Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோல் துறை நெருக்கடி- வேலை இழப்பு

தோல் துறை நெருக்கடி- வேலை இழப்பு
சென்னை , சனி, 31 ஜனவரி 2009 (12:23 IST)
உலக அளவில் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்திய தோல் தொழில் துறை கடுமாயாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களில் மூன்று லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக ஹபீப் ஹுசைன் தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், இன்று இந்திய சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி தொடங்குகிறது.

இதை ஒட்டி தோல் பொருட்கள் ஏற்றமதி குழுவின் தலைவர் ஹபீப் ஹுசைன் செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியால், இந்திய தோல் பொருட்கள் உற்பத்தி துறையின் வளர்ச்சி 20 விழுக்காட்டில் இருந்து 14% ஆக குறையும்.

இந்த தொழிலின் மொத்த வர்த்தகம், கடந்த ஆண்டு 3.5 பில்லியன் டாலராக இருந்தது. இந்த ஆண்டு 4 பில்லியன் டாலராக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இலக்கை எட்டுவது சாத்தியம் இல்லை.

இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 2 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் நிலைமை மோசமாக போய்விட்டது. சென்ற வருடத்தின் வர்த்தக அளவான 3.5 பில்லியன் டாலரை எட்டினாலே போதும்.

இந்திய தோல் பொருட்கள் துறை சென்ற ஆண்டு 20% வளர்ச்சியை எட்டியது. இந்த ஆண்டு 14% ஆக குறைந்துவிட்டது. கடந்த மூன்று மாதமாக நிலைமே படு மோசமாக உள்ளது. இதன் விற்பனை 33% குறைந்துள்ளது என்று ஹபீப் ஹுசைன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இருப்பினும் இது வரை எந்த ஒரு தோல் தொழிற்சாலையும் மூடப்படவில்லை. ஆனால் 75 ஆயிரம் முதல் 1 லட்சம் தொழிலாளர்கள் வரை ஏற்கனவே வேலை இழந்துள்ளனர்.

தோல் பொருட்கள் வர்த்தகத்தில் சீனா போட்டியாளராக உள்ளது.
சீனா வர்த்தகத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக, விலையை 15 விழுக்காடு குறைத்துள்ளது.

எனவே இந்த சூழ்நிலையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த துறையை காப்பாற்ற குறிப்பிட்ட நாடுகளில் சிறப்பு கவனம் செலுத்தும் திட்டம் போன்று பல திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil