Newsworld Finance News 0901 30 1090130033_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாய் மதிப்பு 15 பைசா சரிவு

Advertiesment
ரிசர்வ் வங்கி டாலர் யூரோ யென் பவுன்ட் ஸ்டெர்லிங்
மும்பை , வெள்ளி, 30 ஜனவரி 2009 (12:57 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா சரிந்தது.

அந்நியச் செலவாணி சந்தையில் தொடர்ந்து நான்கு நாட்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வந்த, ரூபாயின் மதிப்பு இன்று குறைந்தது.

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் சரிந்தன. ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. இதனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்யும். இவைகளுக்கு டாலர் தேவைப்படும் என்பதால் வங்கிகள் அதிக அளவு டாலரை வாங்கின. குறிப்பாக பொதுத்துறை வங்கிகளும் டாலரை வாங்கியதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.12 ஆக அதிகரித்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 15 பைசா உயர்வு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.97-48.98.

இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.49.07 முதல் ரூ.49.12 என்ற அளவில் இருந்தது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.49.02 பைசா
1 யூரோ மதிப்பு ரூ.63.25
100 யென் மதிப்பு ரூ.54.83
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.69.83.

Share this Story:

Follow Webdunia tamil