இந்தியாவில் தற்போது 72.4 விழுக்காடு நிலத்திற்கு நீர்ப்பாசனம் அளிக்கக் கூடிய பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
பதினோராவது ஐந்தாண்டு திட்டத்திற்கு முன்பு 388 திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மேலும் 12.1 மில்லியன் ஹெக்டேர் நிலத்திற்கு நீர்ப்பாசன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இதைத் தவிர 10 வது ஐந்தாண்டு திட்டத்தில் மாநில அரசுகள் 24 பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற கோரியுள்ளது. இதனால் 4.99 மில்லியன் ஹெக்டேர் நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும்.
துரிதமாக செயல்படுத்தக் கூடிய நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை 259 திட்டங்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டன. இதில் 9082 சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களும் அடங்கும்.
2007-08 ஆம் ஆண்டு 12 பெரிய மற்றும் நடுத்தர திட்டங்களும், 379 சிறிய திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. 2007-08 ஆம் ஆண்டு 15 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் நீர்ப்பாசன வசதி மேம்படுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் 6.5 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.
சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் 2,000 ஹெக்டேர் வரையிலான நிலத்திற்கு பாசனம் மேற்கொள்ளப்படும். இதில் குளங்கள் மற்றும் ஏரிகள் ஆகியவை அடங்கும். இதன் மூலம் 72.3 விழுக்காடு அளவிற்கு நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறும்.