வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா அதிகரித்தது.
இந்திய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன. மற்ற நாட்டு அந்நியச் செலவாணி சந்தையில், டாலரின் மதிப்பு குறைந்தது. இந்த அளவு இந்நிய அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் மதிப்பு குறையவில்லை. இதற்கு காரணம் மாத இறுதியாகையால் இறக்குமதியாளர்கள் டாலரை அதிக அளவு வாங்கினார்கள்.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.80 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 14 பைசா குறைவு.
நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.49.94.
இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.78 முதல் ரூ.48.87 என்ற அளவில் இருந்தது.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.48.87 பைசா
1 யூரோ மதிப்பு ரூ.64.76
100 யென் மதிப்பு ரூ.54.82
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.69.72.