வேளாண் துறை சார்பில் செம்மை நெல் சாகுபடியில் மகசூலை கணக்கிட பள்ளிப்பாளையம் பகுதியில், பயிர் அறுவடை பரிசோதனை செய்யப்பட்டு மகசூல் திறன் கணக்கீடு செய்யப்படுகிறது.
பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் சம்பா நெல்பயிர் அறுவடை நடந்து வருகிறது. செம்மை நெல் சாகுபடியிலும், சாதாரண முறை சாகுபடியிலும் ஒரு ஏக்கரில் நெல் விளைச்சல் கண்டறிய பயிர் அறுவடை பரிசோதனைகளை வேளாண் துறை மேற்கொண்டுள்ளது.
அய்யம்பாளையம் கிராமத்தில் சென்ற வெள்ளிக்கிழமை நடந்த பரிசோதனையில், புள்ளியியல் ஆய்வாளர் நடராஜன் கலந்து கொண்டார். இப் பரிசோதனையில் வெள்ளைப் பொன்னி ரகம் ஆய்வு செய்யப்பட்டது. இம் மாதிரி பரிசோதனைகள் 20 இடங்களில் நடத்தப்பட்டன. செம்மை நெல் சாகுபடியில் கூடுதல் மகசூலும், சாதாரண முறை சாகுபடியில் சராசரி மகசூலும் பெறப்பட்டது ஆய்வில் தெரியவந்தது என்று பள்ளிப்பாளையம் வேளாண் உதவி இயக்குநர் முரளீதரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.