புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் பெ.சீத்தாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர பிரிவு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி நிலையம், இந்தியன் வங்கி இணைந்து
, இன்று தொழில் முனைவோர் ஊக்குவிக்கும் முகாம் மதுரை மடீட்சியா அரங்கில் புதன்கிழமை நடத்துகின்றன.
இந்த முகாமுக்கு கட்டணம் எதுவும் இல்லை. இதில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். 10 ஆம் வகுப்பு தேறியவர்கள், ரூ.25 லட்சத்துக்கு உள்பட்ட முதலீடு உள்ள புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ஆலோசனைகள், கடனுதவிகள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.