Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்காச் சோளம் விலை உயர்வு

Advertiesment
மக்காச் சோளம் விலை உயர்வு
திண்டுக்கல் , செவ்வாய், 27 ஜனவரி 2009 (11:46 IST)
திண்டுக்கல்லில் விலைப் புள்ளி (டெண்டர்) முறையில் நடைபெற்ற ஏலத்தில் மக்காச் சோளம் விலை அதிகரித்தது.

திண்டுக்கல் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்காச் சோளம், கடலை, நெல் மற்றும் நவ தானியங்கள் விலைப்புள்ளி முறையில் ஏலம் விடப்படுகிறது.

சென்ற சனிக்கிழமை நடைபற்ற ஏலத்துக்கு 25 டன் மக்காச்சோளம் விற்பனைக்கு வந்தது. ஏலத்தில் உயர்ந்தபட்ச விலையாக குவிண்டால் ரூ. 840 வரை போனது. (கடந்த வார விலை ரூ. 780)

சன்ன ரகம் நெல் விலை குவிண்டால் ரூ. 1,300 வரையிலும் பிற ரகங்கள் குவிண்டால் ரூ.1,000 என்ற அளவில் இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil