Publish Date: Tue, 27 Jan 2009 (11:33 IST)
Updated Date: Tue, 27 Jan 2009 (11:33 IST)
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பல முன்னணி நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களில் ஒரு பகுதியினரை பணியை விட்டு நீக்கியுள்ள நிலையில், சர்வதேச நிறுவனமான டாடாவும் 5 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
எனினும் இதன் காரணமாக இந்தியாவில் செயல்படும் டாடா நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான கோரஸ் எஃகு உற்பத்தி நிறுவனத்தில் 3,500 பேரும், ஜாக்குவார் கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 1,500 பேரையும் பொருளாதார நெருக்கடி காரணமாக பணியில் இருந்து நீக்க டாடா முடிவு செய்துள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.