கோரமண்டல் பெர்டிலைசர் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில், இதன் பங்கு இலாப இடைக்கால ஈவு தொகையாக 1 பங்கிற்கு ரூ.6 வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் பங்குகளின் முக மதிப்பு ரூ.2.
தற்போது பங்கு முகமதிப்பை போல் 300 விழுக்காடு இடைக்கால இலாப ஈவு (interim dividend) வழங்க முடிவு செய்யப்பட்டது.
சென்ற வருடம் 1 பங்கிற்கு ரூ.3.50 இலாப ஈவு தொகையாக வழங்கப்பட்டது.
இந்த நிதி ஆண்டில் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் ரூ.8,518.12 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.
(சென்ற நிதி ஆண்டில் இதே கால கட்டத்தில் வர்த்தகம் ரூ.3,172.91 கோடி).
இதன் நிகர இலாபம் ரூ.508.85 கோடியாக அதிகரித்துள்ளது.
(சென்ற நிதி ஆண்டில் ரூ.206.40 கோடி).