இந்த நிதி ஆண்டின், மூன்றாவது காலாண்டில் யூனியன் வங்கியின் நிகர இலாபம் ரூ.671.74 கோடி என்று வங்கி அறிவித்துள்ளது.
இதன் மொத்த வருவாய் ரூ.3,653.79 கோடியாக உள்ளது. (சென்ற வருடம் மூன்றாவது காலாண்டில் மொத்த வருவாய் ரூ.2,806.04 கோடி).
இதில் வரிக்கு பிந்திய இலாபமாக ( நிகர) ரூ.671.74 கோடி பெற்றுள்ளது. (சென்ற வருடம் மூன்றாவது காலாண்டில் நிகர இலாபம் ரூ.365.02 கோடி).