தக்காளியில் இருந்து தக்காளி பேஸ்ட், ஜூஸ் போன்ற மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் எப்படி தயாரிப்பது என்று விவசாயிகளுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த இலவச பயிற்சி நாமக்கல்லில் வரும் 29 ஆம் அளிக்கப்படுகிறது.
இது நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் அளிக்கப்படும் பயிற்சியில், தக்காளி ஜூஸ், தக்காளி பேஸ்ட், தக்காளி கெட்சப், தக்காளி சூப், தக்காளி ஊறுகாய், கேனிங் செய்தல், பேக்கிங் செய்தல் குறித்து விரிவாக பயிற்சி அளிக்க்ப்படும்.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று என்று பயிற்சி மையம் அறிவித்துள்ளது.